50 நாட்களுக்கு சார்ஜ் நிற்கும் ஸ்மார்ட்போன்

என் போன் சார்ஜே நிக்க மாட்டேங்குது. இப்போதான் வாங்கினேன். ஆமா.. என் போனும் அதே ப்ராப்ளம்தான். என்ன பண்றதுனே தெரில.

ஆண்ட்ராய்ட் னா என்ன தெரியுமா.?

ஆமை வேகத்தில் சார்ஜ் ஏறி, முயல் வேகத்தில் முடிந்துபோகும் மொபைலுக்கு ஆண்டிராய்ட் என்று பெயர்.

சமீபத்தில் ட்ரெண்ட் ஆன ஆன்ராய்ட் டெஃபனிஷன் இது.இது போன்ற புலம்பல்களை கடந்து வராத நெட்டிசன்கள் அரிதினும் அரிது.

அவர்களுக்காகவே வந்திருக்கிறது இந்த எனர்ஜைசர் போன். எப்போதும், பவர் பேங்க்கும் கையுமாகத் திரிபவர்களுக்கு இந்த போன் அவசியம் தேவை. பார்ப்பதற்கும் பவர் பேங்க் போல தடிமனாகவே இருக்கும் இந்த போனில் ஒருமுறை முழுமையாக சார்ஜ் ஏற்றிவிட்டால் அடுத்து 50 நாட்களுக்கு சார்ஜ் நிற்கும்.

உலகின் அதிகதிறன் கொண்ட பேட்டரி இந்த மொபைலில் உள்ள பேட்டரிதான்.

18,000mAh சக்தி கொண்ட பேட்டரி இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. அண்மையில் வந்த ஐபோன் XS0-ல் பேட்டரியின் சக்தியே 2658mAh தான். 6.2 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் மூன்று பின்பக்க கேமரா என்று நவீன ஸ்மார்ட்போன்களுக்கு உண்டான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ள இதில் எடை கூடுதலாக இருப்பதே ஒரே ஒரு சங்கடம்.

ஆனால் 50 நாள் சார்ஜ் நிற்கும் என்பதைக் கேட்கிறபோது , இந்த எடை ஒரு பெரிய சிக்கலில்லை.

பிரான்ஸை சேர்ந்த ஆவெனிர் டெலிகாம் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் விலைகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை இல்லை. விரைவில் சந்தைக்கு வர இருக்கிறதாம். விலையும் கட்டுப்படியானால் விடிவுகாலம்தான்.

Exit mobile version