உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு..இந்தியாவிற்கு எத்தனாவது இடம்?

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐ.நா சபையானது வெளியிட்டுள்ளது. உலக அளவில் உள்ள சூழல், வாழ்வாதாரம், போர், மதப்பிரச்சினை, இனப்பிரச்சினை, பொருளாதார ஏற்ற இறக்கம் போன்றவற்றால் உலக நாடுகளில் உள்ள மக்கள் எந்த அளவிற்கு மகிழ்ச்சி நிறைந்தவர்களாக உள்ளார்கள் என்பதை கண்காணித்த ஐ.நா சபை தற்போது அப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

Denmark

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் ஃபின் லாந்து உள்ளது. கிட்டத்தட்ட தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகளாக இந்தப்பட்டியலில் ஃபின் லாந்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் டென்மார்க் மற்றும் மூன்றாவது இடத்தில் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.  ஐந்தாவது இடத்தில் இருந்த இஸ்ரேல் ஒரு இடம் முன்னேறி நான்காவது இடத்திற்கு வந்துள்ளது. ஐந்தாவது இடத்தில் இஸ்ரேல் உள்ளது. ஆறு முதல் பத்து வரை ஸ்வீடன், நார்வே, ஸ்விட்சர்லாந்து, லக்செம்பர்க், நியூசிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

India

இந்தப் பட்டியலில் இந்தியா 126 ஆவது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு 136 ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. இதில் கொடுமையான விசயம் என்னவென்றால் மொத்த நாடுகளின் எண்ணிக்கையே 137 தான். இந்த ஆண்டு 137 ஆவது இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. உலகில் மகிழ்ச்சியே இல்லாத நாடு ஆப்கானிஸ்தான் என்று ஐ.நா சபை தெரிவித்துள்ளது. போர் சூழலில் மாட்டிக்கொண்டிருக்கும் உக்ரைன் 92 வது இடத்தில் உள்ளது.

Exit mobile version