உயிர்நாடியான தண்ணீரை பொறுப்புடனும் சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமை – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

இன்று உலக தண்ணீர் தினமானது அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐநா சபையானது உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு நியூயார்க்கில் கருத்தரங்கம் ஒன்றை மூன்று நாட்களுக்கு நடத்துகிறது. 1993 ஆம் ஆண்டு முதல் மார்ச் 22ல் தண்ணீர் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி இன்றைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சரான எஸ்.பி.வேலுமணி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் “உலகின் உயிர்நாடியான தண்ணீரை எக்காலத்திலும் பொறுப்புடனும், சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமை. இந்த உலக தண்ணீர் தினத்தில், அதை சேமிப்பதின் அவசியம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், நாமும் அதை தவறாமல் கடைபிடிக்க உறுதியேற்போம்!” என்று கூறியுள்ளார்.

Exit mobile version