“உலக தண்ணீர் தினம்”…ஏன்?..எதற்காக..?

இன்று உலகம் முழுவதும் உலக தண்ணீர் தினமானது அனுசரிக்கப்படுகிறது. இதன் முக்கிய நொக்கமாக தண்ணீரின் விழிப்புணர்வு குறித்தும் நன்னீரின் மேலாண்மைக் குறித்தும் உலக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு கொண்டாடப்படுகிறது. 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை எடுத்த தீர்மானத்தின்படி 1993 ஆம் ஆண்டு மார்ச் 22 முதல் உலக அளவில் தண்ணீர் தினமானது அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தண்ணீர் ஏன் இன்றியமையாதது என்று திருக்குறளில் திருவள்ளுவர் தனியே அதற்கொரு அதிகாரமே அமைத்து எழுதியிருக்கிறார். “நீரின்றி அமையாது உலகு” என்கிற அவரின் சிந்தனை காலத்தால் அழியாதது. உலக பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நீர்தான் உள்ளது. உலகம் இயங்க மட்டுமல்ல உடல் இயங்கவும் நீரின் தேவை அடிப்படையாகும். உடல் சூட்டினைத் தகிக்க நீரை விட்டால் வழியேதுமில்லை. மனிதன் ஒருநாளைக்கு குறைந்த பட்சம் மூன்று லிட்டர் நீராவது பருக வேண்டும். கோடைகாலம் தொடங்கிவிட்டால் ஐந்து லிட்டர் நீரினை நிச்சயம் பருகிட வேண்டும். அனைத்து உடல் உபாதைகளும் தண்ணீர் பற்றாக்குறையினாலே ஏற்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் 2022 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின் படி தண்ணீர் பற்றாக்குறையினால் 1.4 மில்லியன் மக்கள் மரணத்தை சந்திக்கின்றனர். மேலும் 74 மில்லியன் மக்கள் சுகாதாரமற்ற நீரினைப் பருகி நோய்வாய்ப்பட்டு வருகின்றனர். மேலும் உலகத்தில் விநியோகிக்கப்படும் 44 சதவீதம் வீட்டுநீரானது குடிப்பதற்கு உகந்தது அல்ல என்று 2021ல் ஐநாவின் ஒரு ஆய்வு கூறுகிறது.  இவ்வளவும் தண்ணீரை மட்டுமே மையப்படுத்தி உள்ளன. ஆகவே தண்ணீர் மனித வாழ்வுக்கு இன்றியமையாத ஒன்று என்று நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த தினத்தினை ஒட்டி நியூயார்க்கில் உள்ள ஐ.நாவில் மூன்று நாட்கள் கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.

தண்ணீர் இல்லாமல் மனிதன் கிடையாது…

Exit mobile version