உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று…!

ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் தேதியில் உலக சிட்டுக்குருவிகள் தினமானது அனுசரிக்கப்படுகிறது. 2010ஆம் ஆண்டிலிருந்து முதன் முதலாக இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது. சிட்டுக்குருவிகள் பூமியின்  பல்லுயிர்ப்புத் தன்மையை நிலைநிறுத்துவதில் சிட்டுக்குருவிகளின் பங்கு மிகவும் முக்கியமான ஒன்று. பெரும்பாலும் அவை நிலப்பரப்புகளில் வாழ்வதில்லை. இந்தியாவில் இமாலய மலைகளில் ஆறாயிரம் அடி உயரத்தில் வாழ்ந்து வருகின்றன. ஒரு சிட்டுக்குருவியின் வாழ்நாள் மூன்று ஆண்டுகள் தான்.  மேலும் அவை முட்டையிட்டு குஞ்சுப் பொரிக்கும் காலம் பத்து முதல் பதினைந்து நாட்களே ஆகும். சிட்டுக்குருவிகள் செல்போன் கதிர்வீச்சுக்களால் இறப்புக்கு உள்ளாகின்றன என்று சொல்லப்படுகிறது. இதனைக் கருவாக வைத்து திரைப்படங்கள் கூட எடுக்கப்பட்டுள்ளன. மனிதர்களாகிய நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்கிறதுதான்.

Exit mobile version