இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடச்சது! இன்று சர்வதேச உணவு கட்டுப்பாடற்ற தினம்..!

உணவுக் கட்டுப்பாட்டில் “அதிகமாகப் பயன்படுத்துவது எதுவுமே நல்லது இல்லை” என்ற பழமொழிக்கேற்ப, ஆரோக்கியமற்ற உணவுமுறை தீங்கு விளைவிக்கும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க, மே 6-ம் தேதி சர்வதேச உணவு கட்டுப்பாடற்ற தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஆரோக்கியமற்ற உணவுமுறை எவ்வாறு தீங்கு விளைவிக்கும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க, ஆண்டுதோறும் மே 6-ம் தேதி சர்வதேச உணவு கட்டுப்பாடற்ற தினம் அனுசரிக்கப்படுகிறது.

அதீத டயட்டால் நொந்துபோன பெண் ஒருவரால் உருவாக்கப்பட்டதுதான் நோ டயட் டே ((No Diet Day)).

ஆம், “டயட் பிரேக்கர்ஸ்” என்ற பிரிட்டிஷ் குழுவின் இயக்குனர் மேரி இவான்ஸ் யங் என்பவரால்,1992-ல் சர்வதேச ”நோ டயட் தினம்” தொடங்கப்பட்டது. இந்த நாளில் நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம், உணவைக் கட்டுப்படுத்துவது மற்றும் உணவுப் பசியை அடக்குவது பற்றி சிந்திக்காமல் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது.

இது நடைமுறைக்கு வந்த அடுத்த ஆண்டே, அதாவது 1993-ம் ஆண்டு பல்வேறு நாடுகளில் உள்ள பெண்ணியவாதிகளால் சர்வதேச உணவுக் கட்டுப்பாடு தினம் கடைப்பிடிக்கபடுகிறது.

நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது போன்ற பழமொழிகளைக் கடந்துவந்த தலைமுறைக்கு, டயட், நோ டயட் டே போன்றவை புதிது.

பள்ளிக் குழந்தைகள் கூட டயட்டில் இருக்கிறேன் என்று சொல்வதெல்லாம் காலத்தின் கொடுமை. சரிவிகித உணவு முறைதான் டயட் என்பது மாறி, உணவைக் குறைப்பதும் சாப்பிடாமல் இருப்பதும்தான் டயட் என்று காலப்போக்கில் மாறிவிட்டது.

இன்றைய உலகில் தங்கள் உடல் எடை குறித்தும், தோற்றம் குறித்தும் தான் பெரும்பாலானோர் கவலைப்படுகிறார்கள். இதில் ஆண், பெண் என்று எந்தப் பாகுபாடும் இல்லை.

நாற்பதுகளை தொட்டவர்களுக்கு இளமையாகத் தோன்ற வேண்டும் என்கிற கவலை என்றால், இருபதுகளில் இருப்பவர்களுக்கோ உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது பெருங் கவலையாக உள்ளது. அதன் எதிரொலியாக பிறந்தது தான் டயட் தினம், நோ டயட் தினம் போன்றவை…

– பாலாஜி, செய்தியாளர்.

 

Exit mobile version