கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களை கெளரவிக்கும் வகையில் உருவாக்கிய உலக வரைபடம்!

கொரோனா காலத்தில் பணியாற்றுபவர்களை கௌரவிக்கும் விதமாக, தேனியில் 400 பேர் சேர்ந்து இணையதளம் மூலம் உலக படம் வரைந்து அசத்தியுள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலர் தனியார் அகாடமியுடன் இணைந்து கொரோனா காலத்தில் களத்தில் பணியாற்றும், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், ஊடகத் துறையினரை கௌரவப்படுத்துவதற்கு புதிய முயற்சியை செய்துள்ளனர். அதன்படி, மாணவர்களின் குறிப்புகளுக்குகிணங்க 400 பேரும் ஓவியங்கள் வரைந்து இணையத்தில் பதிவேற்றம் செய்தனர். ஒரு மாதமாக நடைபெற்ற இந்த முயற்சியில் 400 பேரின் படங்களையும் ஒன்றிணைத்து உலகப் படத்தை உருவாக்கி, அதனை கலாம் உலக சாதனைப் புத்தகத்திற்கு மாணவர்கள் அனுப்பினர். அந்நிறுவனத்தினர் இவர்களின் சாதனையை பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.

Exit mobile version