உலகக்கோப்பை அணியில் கிட்டத்தட்ட உறுதியான வேகப்பந்து வீச்சாளர்கள்…

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நெருங்கி வரும் நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் பெயர்கள் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற இருப்பதால், வேகப்பந்து வீச்சாளர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் அணியின் ஆடும் லெவனில் 2 சுழற்பந்து வீச்சாளர் பதிலாக, 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற வாய்ப்பு உண்டு.

அதன் படி இந்திய அணியில் ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ் குமார், முகமத் ஷமி ஆகியோர் இடம் பெறுவார்கள் என பிசிசிஐ கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் காலீலில் அஹமது மாற்று வேகப்பந்து வீச்சாளாராக அணியில் இடம் பெற வாய்ப்பு உண்டு. உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைப்பது சற்று கடினமே என கருதப்படுகிறது.

Exit mobile version