கோபி-குன்னத்தூர் சாலையை ரூ.16 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் துவக்கம்

பொதுமக்களின் கோரிக்கையையடுத்து கோபிசெட்டிபாளையம் – குன்னத்தூர் குறுகிய சாலையை 16 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் குன்னத்தூர் சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. 7 மீட்டர் அகலம் கொண்ட கோபிசெட்டிபாளையம்- குன்னத்தூர் சாலையில் மொடச்சூர், கொளப்பலூர், கெட்டிசெவியூர் தண்ணீர்பந்தல், சுள்ளிகரடு, வழியாக குன்னத்தூர் சென்று கோவை, சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக முக்கிய நகரங்களுக்கு செல்ல ஏதுவான சாலை என்பதாலும் பெருந்துறை, காங்கேயம், திண்டுக்கல் முக்கிய நகரங்களுக்கு வாகனங்கள் அதிகளவில் செல்வதால் பள்ளி மற்றும் அலுவலக வேலை நாட்களில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலை கடக்கும்போது விபத்துக்களால் உயிர் சேதம் ஏற்பட்டு வந்தது.

எனவே, சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று தமிழக அரசிற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுகொண்ட தமிழக அரசு 7 மீட்டர் அகலம் உடைய சாலையை 10.30 மீட்டர் அகலமுடைய சாலையாக விரிவுப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளது. இந்த பணிகள் முழூவிச்சில் நடைபெற்று வருகின்றன. தங்களின் கோரிக்கையை ஏற்று சாலையை விரிவாக்கம் செய்யும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version