தேவையான திருத்தங்கள் செய்தால் மட்டுமே குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு ஆதரவு: உத்தவ் தாக்கரே

குடியுரிமைச் சட்ட மசோதாவில் தேவையான திருத்தங்களைச் செய்தால் மட்டுமே மாநிலங்களவையில் அதற்கு சிவசேனா ஆதரவளிக்கும் என மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மக்களவையில் குடியுரிமைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டபோது அதற்கு சிவசேனா உறுப்பினர்கள் 18 பேரும் ஆதரவு தெரிவித்தனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைத்துள்ள சிவசேனா கட்சி மத்திய பாஜக அரசின் நிலைப்பாட்டை ஆதரித்தது வியப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா தலைவரும் மகாராஷ்டிர முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைக்கும் வரை மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்தார். இந்தச் சட்டமசோதாவைக் கண்டு அஞ்சுபவர்களின் சந்தேகத்தைத் தீர்ப்பது அரசின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டார். சந்தேகத்துக்கு விளக்கமளிப்பதுடன் தேவையான திருத்தங்களைச் செய்தால் மட்டுமே மசோதாவை சிவசேனா ஆதரிக்கும் எனவும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

Exit mobile version