பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்

டென்னிஸ் போட்டி தரவரிசையில் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று முதல் 28-ந்தேதிவரை சிங்கப்பூரில் நடக்கிறது.

இதில் களம் காணும் வீராங்கனைகள் ‘ரெட்’, ‘ஒயிட்’ என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிப்பவர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள். இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.51 கோடியாகும்.

ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு ரூ.13½ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். இறுதி சுற்றில் தோல்வி அடையும் வீராங்கனைக்கு ரூ.5 கோடி கிடைக்கும்.

தொடக்க நாளில் கிவிடோவா-ஸ்விடோலினா (இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணி) வோஸ்னியாக்கி-பிளிஸ்கோவா (மாலை 5 மணி) ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

Exit mobile version