மேற்கு வங்க மாநிலம் ஆசன்சோல் மாவட்டத்தில் செல்போனைப் பறித்த கொள்ளையனை மடக்கிப் பிடித்த பெண்கள் இருவர் அவனை அடித்து உதைத்துக் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆசன்சோல் மாவட்டத்தைச் சேர்ந்த குல்தி என்னுமிடத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் ஒருவன் செல்போனைப் பறித்துக் கொண்டு ஓடியுள்ளான்.
கொள்ளையனை விடாமல் துரத்திச் சென்று பிடித்த பெண்கள் இருவர் அவனைச் சரமாரியாக அடித்து உதைத்ததுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்தத் தாக்குதல் காட்சி இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.