கணவருடன் சேர்த்து வைக்க கோரி இரண்டு குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு கிரிஜாமணி என்ற மனைவியும், ஸ்ரீ சந்தோஷ் பாண்டியன், ஹர்ஷவர்த்தினி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ராஜா தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து தாய் தந்தையுடன் வாழ்ந்து வருவதாக தெரிகிறது. இதனையடுத்து கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கூறி ராஜாவின் மனைவி கிரிஜா மணி மற்றும் குழந்தைகள் ராஜாவின் வீட்டு வாசலில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் கிரிஜாமணி தனது குழந்தைகளுடன் போராட்டத்தை கைவிட்டு வீட்டிற்கு சென்றார்.