எல்.பி.ஜி டேங்கர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில், தெரிவித்துள்ளனர்.
பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களின் சேமிப்பு கிடங்கில் இருந்து சமையல் எரிவாயுவை சிலிண்டர்களில் அடைக்கும் மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செல்லும் பணியை எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கூடுதலாக 700 எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கும் பணி ஒப்பந்தம் வழங்க கோரி, இன்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. லாரி உரிமையாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண மத்தியஸ்தரை நியமித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி காஷ்மீர் மாநில முன்னாள் தலைமை நீதிபதி பால் வசந்தகுமார் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை திரும்ப பெற்றுள்ளனர்.