டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தின் வெளியே காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என மொத்தம் 50 பேர் காயமடைந்தனர். கார்கள், இருசக்கர வாகனங்கள் என 20 வாகனங்களும் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து காவல்துறையினர் குடும்பத்தினருடன், டெல்லி காவல்துறைத் தலைமை அலுவலகத்தின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி சுமார் பத்து மணி நேரமாக போராட்டம் நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் திரும்ப பெறப்பட்டது.
டெல்லியில் காவல்துறையினர் நடத்திய போராட்டம் திரும்ப பெறப்பட்டது
