உன்னை போலவே நானும் நடனம் ஆட வேண்டும்: இளம் நடிகரை புகழும் தனுஷ்

“சில் புரோ” பாடலுக்கு நடிகர் சாந்தனு நடனம் வீடியோ வைரலானத் தொடர்ந்து, நானும் அவரைப் போலவே ஆடவேண்டும் விரும்புவதாக என்று தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.

இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் ‘கொடி’ படத்தை அடுத்து தனுஷை வைத்து இயக்கிய படம் ‘பட்டாஸ்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேரீன் பிர்ஜாதா மற்றும் சினேகா நடிக்கின்றனர். புதுப்பேட்டை படத்துக்கு பின்னர் நடிகை சினேகா இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்திருக்கிறார். இப்படத்தை சத்யஜோதி ஃபில்ம்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தில் தந்தை-மகன் என இரண்டு கதாப்பாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ள நிலையில் தனுஷ் பாடிய ‘சில் ப்ரோ’ எனும் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், நடிகர் சாந்தனு தனது மனைவியுடன் சேர்ந்து, “சில் புரோ” பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நடிகர்  தனுஷ் ட்வீட் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நானும் அவரைப் போலவே ஆட விரும்புவதாக தெரிவித்தார்.

நடிகர் சாந்தனு மூன்று பெரிய முக்கிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் “தளபதி 64”, இயக்குநர் மணிரத்தினத்தின் “வானம் கொட்டட்டும்”, வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கும் “கசட தபற” ஆகிய படங்களில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version