திருச்சி ரயில் நிலையத்தில் காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் கருவி அமைப்பு

திருச்சி ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள காற்றில் இருந்து குடிநீர் தயரிக்கும் கருவி, மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

திருச்சி கோட்ட ரயில்வே நிலையத்தை நவீனப்படுத்தும் முயற்சியில் தெற்கு ரயில்வே ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ரயில் நிலைய நடைமேடையில் காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் கருவியை 2 லட்சம் செலவில் ரயில்வே நிர்வாகம் அமைத்துள்ளது. இதன் மூலம் தினமும் 180 லிட்டர் குடிநீர் பெறுவதாகவும், இது சுத்தமான நீராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சோதனை முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம், விரைவில் அனைத்து நடை மேடைகளிலும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளதாக ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி மானச ரஞ்சன் தலாய் தெரிவித்துள்ளார்.

Exit mobile version