இந்த மரத்தை வெட்டினால் இரத்தம் வருமா ?

அரபிக் பெருங்கடலில் டிராகன் மரம் என்று சொல்லக்கூடிய ஒரு விநோத மரம் ஒன்று காணப்படுகிறது. இந்த மரத்தினை வெட்டினால் மரத்தில் இருந்து இரத்தம் வருமாம், அப்படி என்ன இந்த மரத்திற்கு சிறப்பு உண்டு ?

இயற்கை என்பது நம்மால் முழுமையாக ஆராய முடியாத ஒரு வரப்பிரசாதமாகும். இயற்கையின் ஒரு அழகான பகுதி எதுவென்றால் கடலும் அதை சார்ந்த தீவுகளும் தான்.

இங்கு தான் நாம் அரியாத பல உயிரினங்கள் மற்றும் மரம் செடி கொடிகள் இருக்கின்றன. இப்படி இருக்கும் ஒரு இடம்தான் அரபிக் பெருங்கடலில் இருக்கும் வெப்ப மண்டலம். இங்கு ஒரு விநோதமான மரம் இருக்கிறது.
 
அதை டிராகன் ரத்தம் மரம் என்கிறார்கள். இதற்கு ஏன் இந்த பெயர் வந்தது என்றால் இந்த மரத்தை நாம் வெட்டினால் அந்த மரத்திற்குள் இருந்து ரத்த நிற மருந்து ஒன்று வெளியாகி அந்த வெட்டுக் காயத்தை மறைய செய்கிறதாம்.

இப்படி தனக்கு ஏற்பட்ட காயத்தை தன் உடம்பில் இருந்து மருந்தை வெளியேற்றி, காயத்தை ஆற்றிய அதிசயம் நடப்பதினால் இதை ஒரு விநோத மரம் என்கிறார்கள்.

இதனால் தான் இந்த மரத்திற்கு ரத்தம் மரம் என்ற பெயர் வந்துள்ளது. இந்த மரம் 70 அடி உயரத்திற்கு வளருமாம். 30 ஆண்டுகளுக்கு பிறகு தான் இந்த மரம் கிளை விடுமாம்.

இந்த மரம் பார்ப்பதற்கு ஒரு குடை அல்லது காளான் போன்று காட்சியளிக்கும். ஒன்றோடு ஒன்று இணைந்து நெருக்கமான கிளைகளை கொண்ட இந்த மரத்தை நேரில் சென்று பார்ப்பது என்பது மிகவும் கடினம்.

Exit mobile version