மாநிலங்களவையில் நிறைவேறுமா முத்தலாக் மசோதா?

மக்களவையில் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் மசோதா, மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், கடந்த 17-ம் தேதி முத்தலாக் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பும்படி, எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்புக்கு இடையே, கடந்த வியாழன் அன்று, முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.

நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூட இருக்கிறது. மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்கிறது. ஆளும் கட்சியை விட, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு எண்ணிக்கை 120க்கும் மேல் இருப்பதால் நிறைவேறுவது கடினம் என்று கருதப்படுகிறது. மாநிலங்களவையில், கடந்த முறை முத்தலாக் மசோதா தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version