வனப்பகுதியில் வறட்சி நிலவி வருவதால் தவிக்கும் வனவிலங்குகள்

வனப்பகுதியில் வறட்சி நிலவி வருவதால் ஆபத்தான மலைப்பள்ளத்தாக்கு பகுதிகளில் யானைகள் உணவைத்தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, பார்லியார், கல்லார் உள்ளிட்ட பகுதிகளுக்கு உணவை தேடி காட்டு யானைகள் செங்குத்தான பாறைகள், மலை பள்ளத்தாக்குகள் நிறைந்த ஆபத்தான பகுதிகளில் சுற்றி வருகின்றன. 50 சதவிதம் வனப்பகுதிகளை கொண்ட நீலகிரி மாவட்டம் அழிவின் விளிம்பில் உள்ள பல வன உயிரினங்களின் புகலிடமாகவும் விளங்கி வருகிறது. வறட்சியின் காரணமாக யானை, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் உணவுகளைத்தேடி விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டு வருகின்றன. உணவைத்தேடி ஆபத்தான மலை பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு செல்வதால் சில சமயங்களில் தவறி விழுந்து இறக்கும் சம்பவங்களும் நிகழ்வதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Exit mobile version