மனைவியின் கள்ளக்காதலன் படுகொலை: பள்ளி ஆசிரியர் நீதிமன்றத்தில் சரண்

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியில் மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்த கணவர் மற்றும் சகோதரன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த ராஜமுருகன் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரேவதியும் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ரேவதிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜனுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்தநிலையில், வீட்டைவிட்டு வெளியேறிய ரேவதி, கோவிந்தராஜனுடன் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரேவதியின் கணவர் ராஜமுருகன், தனது சகோதரனுடன் சேர்ந்து கோவிந்தராஜனைக் கொலை செய்துள்ளார். இதையடுத்து சிதம்பரம் நீதிமன்றத்தில் இருவரும் சரணடைந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version