அதிபர் டிரம்புக்கு கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை: வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் அமெரிக்காவுக்கு சென்ற பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனாரோ டிரம்பை சந்தித்தார். இந்த சந்திப்பில், பிரேசில் அதிபரின் செய்தித் தொடர்பு செயலாளர் ஃபேபியோ பங்கேற்றார். அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால், ஃபேபியோ மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். டிரம்புக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ? என கேள்வி எழுந்தது. இந்தநிலையில், டிரம்புக்கு கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

Exit mobile version