அதிமுக ஆட்சியில் Present, திமுக ஆட்சியில் Absent! அக்கிரமங்களைக் கண்டு பொங்கும் நடிகர் சத்யராஜ் எங்கே!

தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை, விஷச்சாராய மரணம் என தொடர்ந்து குற்றச்சம்பவங்களாக நடந்து கொண்டிருக்கின்றது…. மாநிலமே களேபர சூழலில் இருக்க, எதற்கெடுத்தாலும் வீடியோ வெளியிட்டு நியாயம் கேட்ட “சிங்கத் தமிழன்” சத்யராஜை கண்ணுக்கெட்டிய தூரம் காணவில்லை…..! எங்கே போனார் போலி புரட்சியாளர் நடிகர் சத்யராஜ்….?

கடந்த அதிமுக ஆட்சி காலங்களில் நடைபெற்ற சம்பவங்களில் அழையா வீட்டுக்கு நுழையா விருந்தாளியாக வந்தவர் நடிகர் சத்யராஜ்…. ஒரு காலத்தில் எம்ஜிஆரின் ரசிகர் என்று தன்னை தம்பட்டம் அடித்துக் கொண்டவர்… இன்று ஸ்டாலினிடம் கை கட்டி, வாய் பொத்திக் கொண்டிருக்கிறார்….

பொள்ளாச்சி விவகாரத்தில் “கொடூரத்தின் உச்சம் என்று வீடியோ வெளியிட்ட” சத்தியராஜ், கனிமொழி பேசிய மேடைக்கு கீழே பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தமிழகமே கொந்தளித்த போதும் காதை பொத்திக் கொண்டு வீட்டிலேயே முடங்கினார்…..

தூத்துக்குடி விவகாரத்தில் “ எங்கோ இருக்கும் முதலாளிகள் அவ்வளவு முக்கியமா என கடும் கண்டனம் தெரிவித்தவர் இன்று விஷசாராயம் குடித்து 22 பேர் பலியாகிவிட்ட நிலையில் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.. இது மட்டுமில்லை…! பேரறிவாளன் விடுதலை விவகாரம் உட்பட இன்னும் பல விவகாரத்தில் wantated ஆக entry கொடுத்து, வீடியோ வெளியிட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதை வழக்கமாக கொண்டிருந்தவர்….

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக மக்களின் ரத்தத்தை சொட்டு சொட்டாக உறிஞ்சிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் தலைமையிலான அரசை சத்தியராஜ் கண்டுகொள்ளவில்லை… பொருளாதார சுரண்டல், மதுபானத்தில் கொள்ளை, நில ஆக்கிரமிப்பு,சென்னையின் பூர்வகுடிகள் விரட்டியடிப்பு, மீனவர்கள் பிரச்னை, பாலியல் குற்றங்கள்,என தமிழ்நாட்டின் நிலை படுகுழி நோக்கி செல்கிறது. இத்தனை நடந்தும் நொடிக்கு நொடி வீடியோ வெளியிட்ட, போராளி சத்தியராஜ் இதுவரை ஸ்டாலினுக்கு எதிராக மூச்சு கூட விடவில்லை….

தமிழ் சினிமா மொத்தத்தையும் அமைச்சர் உதயநிதி திரைமறைவில் நின்று கொண்டு கபளீகரம் செய்து கொண்டிருக்கிறார்… சிறு தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என பலரும் 3 வருடம் கழித்து வந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் சொந்த ஊர் சென்றுவிட்டனர். அநீதிக்கு எதிராக கொந்தளிக்கும் சத்தியராஜ் தான் சார்ந்த துறை கபளீகரம் செய்து கொண்டிருப்பதை அறிந்தும் சிறு துரும்பை கூட அசைக்கவில்லை…

அண்ணா திமுக ஆட்சியில் கடுகளவு பிரச்னையை கூட மலையளவு பிரச்னையாக மாற்ற தெரிந்த சத்தியராஜிற்கு,அழிவின் விழிம்பில் இருக்கும் தமிழகம் கண்ணுக்கு தெரியவில்லை… 2 ஆண்டுகளாக சைலண்ட் மோடில் இருக்கும் சத்தியராஜை கண்ணுக்கு எட்டிய தூரம் காணவில்லை, அவரை கண்டுபிடித்துக் கொடுக்கும்படி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version