கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலையானது சமீபகாலத்தில் அதிக அளவு அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுக்கோப்பில் கொண்டு வருவதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஆலோசனைக் குழு ஒன்று கூடியுள்ளது. இந்தக் கூட்டத்தில் கோதுமையின் விலையினைக் கட்டுப்படுத்த அரசு சங்கங்களிலிருந்து 30 லட்சம் டன் கோதுமை வெளிச் சந்தைகளில் விற்பனை செய்வதற்காக ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கோதுமையின் விலை அதிகரித்து இருப்பதால் வட இந்தியர்கள் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். கடந்த பத்தாண்டினைவிட தற்போது கோதுமையின் விலை ஏற்றமடைந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கோதுமையினை வெளி நிறுவனங்கள் வாங்குவதற்கு இ-ஏலம் எடுக்கலாம் என்று இந்திய உணவுக் கழகமானது அறிவிப்பு செய்துள்ளது. இதனால் ஒரு வாரகாலத்தில் 30 லட்சம் டன் கோதுமையானது விற்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.