இன்று உலகம் முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.அனைத்து குழந்தைகளுமே குழந்தை பருவத்தை சந்தோஷமாக கடந்து வர வேண்டும்.ஆனால் சில சூழ்நிலைகளில் அனைத்துக் குழந்தைகளும், கொடுமைக்கு உள்ளாவது, தவறாகப் பயன்படுத்தப்படுவது என பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.இதற்கு அவர்களின் பெற்றோர்களையும் குறை கூற முடியாது.குழந்தைகளுக்கு நிகழும் அவலங்களுக்கு பெரும்பாலும் குழந்தைகளை சுற்றி இருப்பவர்களே காரணமாக இருக்கிறார்கள்.தங்களின் மன கருத்தை சொல்ல தெரியாத நிலையில் குழந்தைகள் இருப்பதால் மிகவும் பலவீனமாக உள்ளனர்.இந்த நிலையை நீக்க குழந்தைகளுக்கான அடிப்படையை உரிமையை நாம் கொடுக்க வேண்டும்.
18 வயதுக்கு கீழ் இருக்கும் அனைத்து நபர்களும் குழந்தைகளே.இந்திய அரசியலமைப்பு சட்டம் குழந்தைகளுக்கான சில உரிமைகளை அளித்திருக்கிறது.அந்த உரிமைகளை பற்றி கீழே காண்போம்..
1) 6-14 வயதுடைய குழந்தைகள் அனைவருக்கும் கட்டாயமாக ஆரம்ப கல்வி இலவசமாக பெற உரிமை உள்ளது.
2) 14 வயது பூர்த்தியாகும் வரை தீங்கு விளைவிக்கும் சூழ்நிலையில் வேலை செய்ய தடை என்கிற பாதுகாப்பு உரிமை உள்ளது.
3) குழந்தைகளின் வயது அல்லது வலிமையை மீறிய பணிகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்த தடை என்ற பாதுகாப்பு உரிமை உள்ளது.
குழந்தைகள் உரிமையை 1989ஆம் ஆண்டு ஐ.நா சபை ஏற்று 1992ம் ஆண்டு இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது.குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் 4 பிரிவுகள் உள்ளன.
1)வாழ்வதற்கான உாிமை
உயிா்வாழ உாிமை
சத்தான உணவு பெற உாிமை
பெயா் மற்றும் தேசிய அடையாளத்திற்கான உாிமை
2)வளா்ச்சிக்கான உாிமை
கல்வி பெறுவதற்கான உாிமை
சமூக பாதுகாப்பு உாிமை
ஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான உாிமை
3)பாதுகாப்பு உாிமை
அனைத்து சுரண்டல்களிலில் இருந்து பாதுகாப்பு
பாலியல் தொந்தரவு மற்றும் உடல் மீதான துன்புறுத்தலிலிருந்து பாதுகாப்பு
தரக்குறைவாக நடத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பு
அவசரகால நிலை, ராணுவ பிரச்சனை காலங்கள் போன்ற பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வேலை வாங்குவதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உரிமை
4) பங்கேற்பதற்கான உாிமை
குழந்தைகளின் எண்ணம் மற்றும் கருத்துக்கள் மதிக்கப்படவேண்டும்
சாியான தகவல் பெற உரிமை
சுதந்திரமாக சிந்திக்க,அதன்படி நடக்க. விரும்பிய சமயத்தைப் பின்பற்ற உரிமை
குழந்தை பருவத்தினை அனைத்து குழந்தைகளும் சந்தோஷமாக கடப்பதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது.இவற்றை தெரிந்துக்கொண்டு பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களை வழி நடத்த வேண்டும்.கிராம புறங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி வழங்குவதே குழந்தைகளின் வளர்ச்சியின் முதல் கட்டம்.இன்றைய குழந்தைகளே நாளைய சமுதாயம். எனவே குழந்தைகளை பாதுகாப்பது நமது கடமை. அனைத்து குழந்தைகளுக்கும் நியூஸ் ஜெ தொலைக்காட்சி சார்பாக குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்..