திரைப்படப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடைசிவரை சிகிச்சைபெற்றுவந்த சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையின் சார்பில் அதன் உதவி இயக்குநர் மருத்துவர் அனுராதா பாஸ்கரன் இன்று மதியம் 1.45 மணிக்கு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதன் விவரம்:
“கடந்த ஆகஸ்ட் 5-ல் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதிக நிமோனியா பாதிப்பால் அவருக்கு ஆகஸ்ட் 14-லிலிருந்து உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்துறை மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய தீவிர சிகிச்சைப் பிரிவினர் அவரின் உடல்நிலையை தொடந்து கண்காணித்து வந்தனர். அதையடுத்து, செப். 4 அன்று அவருக்கு கொரோனா தொற்று நீங்கியது, உறுதிசெய்யப்பட்டது. இன்று காலை ஏற்பட்ட திடீப் பின்னடைவால் உச்சபட்ச உயிர்காப்பு சிகிச்சை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மதியம் 1.04 மணிக்கு அவர் இயற்கை எய்தினார்.” என்று மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.