ஐஐடி உன்னிகிருஷ்ணன் தற்கொலை விவகாரம்: நடந்தது என்ன?

 

தற்கொலை செய்துகொண்ட உண்ணிகிருஷ்ணனின் தந்தை ரகுவும், தானும் நண்பர்கள் என குமாரவேலு தெரிவித்தார்.
அந்த அடிப்படையிலேயே உண்ணிகிருஷ்ணனை தனது வீட்டின் முதல்மாடியில் தங்க இடமளித்தாக தெரிவித்தார்.

இந்நிலையில் அவருடன் அறையில் தங்கியிருந்த கேரளாவைச் சேர்ந்த அணில் குமார், சேலத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஆகியோரிடமும் கோட்டூர்புரம் காவல் நிலையம் அழைத்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோல் எடுத்து ஊற்றி தற்கொலை செய்துகொண்டாரா?ஐஐடி ஆய்வகத்தில் இருந்து பெட்ரோல் எடுத்து வந்து தற்கொலை செய்துகொண்டாரா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆங்கிலத்தில் அவர் எழுதிய கடிதத்தில், தனது அறை நண்பர்கள் தன்னை நன்றாக பார்த்துக்கொண்டதாகவும், தற்சமயம் மன அழுத்தத்தால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை எனவும், பெற்றோருக்கு பாரமாக இருக்கவிரும்பவில்லை எனவும் எழுதியுள்ளார்.

மேலும் கேரளாவில் தான் படித்த கல்லூரியில் நடந்த சில நிகழ்வுகளையும் குறிப்பிட்டு எழுதியுள்ளார் எனவும் போலீசார் தெரிவித்துள்ளார்.

தடயவியல் துறை ஆய்வு. உன்னி கிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்ட இடத்தில் தடயவியல் துறையினரும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட உன்னி கிருஷ்ணன் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை வாங்குவதற்காக அவரது பெற்றோரும் இஸ்ரோ விஞ்ஞானியான ரகு மற்றும் தாய் உள்ளிட்டோர் வந்து கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version