திருச்சியில் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான மக்கள் நலத் திட்ட பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.
திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம் நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 1 கோடியே 37 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் செல்வராசு கலந்துகொண்டார். தொடர்ந்து, ஸ்ரீராம சமுத்திரம் ஊராட்சி ஆலம்பாளையம் புதூரில் ரூபாய் 9 லட்சம் மதிப்பிலான புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா மற்றும் உன்னியூர் ஊராட்சியில் உள்ள காட்டுப்புத்தூர் வாய்க்காலில் ரூபாய் 24 லட்சம் மதிப்புள்ள பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா ஆகியவற்றிலும் அவர் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துறை சார்ந்த அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Discussion about this post