நாடாளுமன்ற தேர்தலில் கமல் போட்டியை வரவேற்கிறேன்-முன்னாள் மத்திய இணை அமைச்சர் மூர்த்தி

நடிகர் கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக கூறியதை வரவேற்பதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை வில்லிவாக்கத்தில் பாமகவின் மத்திய சென்னை மேற்கு மாவட்டத்தின் செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. இதில், பாமக நிர்வாகியும், முன்னாள் இணை அமைச்சருமான மூர்த்தி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு பாமக தயாராக உள்ளதாக கூறினார். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Exit mobile version