பேரறிஞர் அண்ணாவின் 54ஆவது நினைவு தினம் பிப்ரவரி 3ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதனையொட்டி சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அஞ்சலி செலுத்த உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு அதிமுக சார்பில் சென்னை வேப்பேரியிலுள்ள காவல் ஆணையரகத்தில் மனு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சி மன்றக்குழு விரைவில் கூடி ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை அறிவிக்கும் என்று தெரிவித்தார். வேட்புமனு தொடர்பான ஏ மற்றும் பி பிரிவு விண்ணப்பங்களில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிதான் கையெழுத்திடுவார் என்று விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இரட்டை இலை சின்னம் தங்களுக்குதான் கிடைக்கும என்று திட்டவட்டமாக கூறினார்.
இடைத்தேர்தலில் இரட்டை இலைச்சின்னம் தங்களுக்கே கிடைக்கும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் !
-
By Web team
- Categories: அரசியல்
- Tags: #Ex_MinisterJayakumarAdmkadmk symbolChennaierode by election 2023
Related Content
பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்... சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!
By
Web team
September 25, 2023
முடிக்கப்படாத மழைநீர் வடிகால்வாய் பணி !கோடிக்கணக்கில் வீணான மக்கள் வரிப்பணம்!
By
Web team
September 17, 2023
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாருக்கு அதிமுக சார்பில் மரியாதை!
By
Web team
September 5, 2023
செப்டம்பர் 4-ல் பொதுச்செயலாளர் தலைமையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்!
By
Web team
September 1, 2023
பார்க் அருகே பார்க்கிங் பிரச்சனை! மயிலாப்பூர்வாசிகள் வேதனை!
By
Web team
August 31, 2023