திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நீர் மேலாண்மை முகாமின் தொடக்க விழா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஜல்சக்தி அபியான் என்கின்ற நீர் மேலாண்மை கருத்தரங்க தொடக்க விழாவை பல்கலைக்கழக துணை வேந்தர் சுந்தரவடிவேலு துவக்கிவைத்தார். இந்த கருத்தரங்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமி கலந்து கொண்டு பேசுகையில் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மழை நீரை சேமித்து குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என கூறினார். மேலும், குறைந்த நீரை கொண்டு வேளாண் உற்பத்தியை பெருக்கி தங்களது பொருளாதாரத்தை உயர்த்த புதிய தொழில் நுட்பத்தை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் விவசாய பொருட்கள் மற்றும் இடு பொருட்கள் கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது.