குடிக்க பணம் கேட்டு மெட்ரோ ரயில் பாலத்தின் மேல் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு எச்சரித்து அனுப்பினர்.
திருவொற்றியூர் தியாகராயபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் என்பவர் குடித்து விட்டு டோல்கேட் பகுதியில் உள்ள 30 அடி உயர மெட்ரோ ரயில் மேம்பாலத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினார். தகவல் அறிந்து வந்த போலீசார் செல்வத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், அவர் கீழே இறங்காமல் கீழே குதிக்க போவதாக அச்சுறுத்தினார். இதனையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் செல்வத்திற்கு தெரியாமல் மெட்ரோ ரயில் மேம்பாலத்தில் ஏறி பின்புறமாக சென்று அவரை பிடித்தனர். பின்னர் அவரை எச்சரித்த போலீசார், உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.