திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் வைகாசி விசாக தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் ஆலயம், கொங்கு 7 சிவ தலங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது. இத்தலத்தில் வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்வில் 10 ஆம் நாள் திருவிழாவையொட்டி, அர்த்தநாரீஸ்வரர் திருத்தேரில் எழுந்தருளினார்.
இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, திருத்தேரினை வடம்பிடித்து இழுத்தனர். இதனைத் தொடர்ந்து கிழக்கு ரத வீதி மற்றும் தெற்கு ரத வீதி வழியாக திருத்தேர் இழுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. மீண்டும் நாளை மற்றும் நாளை மறுநாள் தேர் இழுக்கப்பட்டு நிலையில் கொண்டு சேர்க்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.