விருதுநகரில் பட்டாசு ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி தொழிலாளர்கள் மவாட்ட அட்சியரிடம் மனு அளித்தனர்.
விருதுநகர்,சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இத்தொழிலை நம்பி லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயித்து உச்சநீதிமன்றம் பல உத்தரவுகளை விதித்துள்ளது. இதனால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்படுவதாக கூறி கடந்த 20 நாட்களாக பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலை
நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பட்டாசு தொழிலை மட்டுமே நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருவதாகவும், இதனால் ஆலையை உடனே திறக்க உத்தரவிடக் கோரியும் மாவட்ட ஆட்சியர் சிவஞானத்திடம் பட்டாசு தொழிலாளர்கள் மனு அளித்துள்ளனர்.