உடுமலை அருகே வன தேவதைகளுக்கு பொங்கல் படையலிட்டு மழைவாழ் மக்கள் பொங்கல் பண்டிகையை பாரம்பரிய நடனங்களுடன் உற்சாகமாக கொண்டாடினர்.
திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் உள்ள பொற்பாற்குடி என்ற மழை கிராமத்தில் தை பொங்கல் பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது. வனதேவதைகளை வரவேற்கும் பொருட்டு பொங்கல் படையலிட்டு மலைவாழ் வழிபட்டனர்.
பாரம்பரிய இசை கருவிகளை வாசித்து குழவி இட்டாவாறு நடனமாடி அவர்கள் மகிழ்ந்தனர். தை மாதம் முழுவதும் கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாக பல்வேறு வகையான படையல்கள் இடப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.