"சூரரைப்போற்று" படத்தில் வெய்யோன்சில்லி பாடல்: கவிஞர் விவேக் விளக்கம்

“சூரரைப்போற்று” படத்தில் பாடல் எழுதியுள்ள கவிஞர் விவேக், அந்த பாடலின் முதல் வரியின் அர்த்தத்தை தெரிந்த கொண்டு மிகவும் ஆச்சரியமானதாக தெரிவித்தார்.

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள “சூரரைப்போற்று” என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகை, பர்ணா பாலமுரளி நடித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விமான சேவையை தொடங்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சூரரைப்போற்று படத்தின் டீசர் மற்றும் மாறா தீம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, கவிஞர் விவேக் எழுதிய வெய்யோன்சில்லி என்ற பாடல் அடுத்ததாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெய்யோன்சில்லி என்று தொடங்கும் பாடல் குறித்து கவிஞர் விவேக் ஆச்சரியமான தகவல் ஒன்றை ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், நடிகர் சூர்யாவுக்காக, நான் எழுதும் முதல் பால் இது. இதில், எதிர்பாராவிதமாக ஒரு ஒற்றுமை ஏற்பட்டது எனக்கே ஆச்சரியமாக இருப்பதாக தெரிவித்தார். நான் எழுதிய பாடலின் முதல் வரியில் வெய்யோன் என்று குறிப்பிட்டிருப்பேன். வெய்யோன் என்றால் சூரியன் என்று பொருள். வெய்யோன்சில்லி என்றால் சூரியனின் ஒரு துண்டு’ என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Exit mobile version