கோவை நகராட்சி ஊழியர்களால் அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டம்

குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்து சாகுபடி செய்யும் காய்கறிகள் கோவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நகராட்சியை தூய்மையான நகராட்சியாக மாற்றும் முயற்சியாக பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குப்பைகளை சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்படுகின்றன. மட்கும், மட்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரமாக மாற்றப்படுகின்றன.

துப்புரவு பணியாளர்களால் அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டங்களில் இந்த உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தோட்டங்களில், விளைவிக்கப்படும் காய்கறிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் மாதத்திற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைப்பதாக நகராட்சி நிர்வாகம் கூறுகிறது.

Exit mobile version