இந்தியன் 2 படக்குழுவினருக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் படப்பிடிப்பு நடத்திய இந்தியன்-2 படக்குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு மயிலாப்பூரில் உள்ள ராதா கிருஷ்ணன் சாலையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. படப்பிடிப்பின் போது சாதனங்களை சாலையில் வைக்கப்பட்டதால், வாகன ஓட்டிகளும், நடைபாதைகளில் செல்வோரும் சிரமத்திற்குள்ளாகினர். இதனால் ராதா கிருஷ்ணன் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் படப்பிடிப்பு நடத்தும், இந்தியன் 2 படப்பிடிப்பு குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். படப்பிடிப்பை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version