கஜா புயல் – முதலமைச்சரின் பொது நிவாரண நிதி வழங்குவதில் பல்வேறு தரப்பினர் ஆர்வம்

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து நிதியளித்து வருகின்றனர்.

 

லட்சுமி மில்ஸ் குழுமத் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தன வேலு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

சாய்ராம் கல்வி குழுமங்களின் சார்பில் அதன் தலைவர் சாய்பிரகாஷ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமை செயலகத்தில் சந்தித்து 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

மாலைமுரசு இயக்குநர் கண்ணன் ஆதித்தன் 25 லட்சம் ரூபாய் காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.

விஜிபி குழுமத்தின் தலைவர் வி.ஜி. சந்தோஷம், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

மத்திய பெட்ரோல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் சார்பாக 50 லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது.

ரெப்கோ வங்கித் தலைவர் செந்தில்குமார் 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினார்.

சென்னை கொளத்தூர் எவர்வின் கல்வி நிறுவனம் மற்றும் அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் மகேஸ்வரி மற்றும் மாணவிகள், முதலமைச்சரை நேரில் சந்தித்து 31 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

உதவும் கரங்கள் நிறுவன செயலாளர் வித்யாகர் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

திருவாரூர் ஸ்ரீ நாராயணி நிதி லிமிடெம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ். கார்த்திகேயன், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் யு. சுதிர் லோதா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். 

Exit mobile version