2022-ம் ஆண்டிற்குள் காஷ்மீர் முதல் குமரி வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்படும்: பியூஷ் கோயல்

டெல்லியிலிருந்து ஜம்மு காஷ்மீரின் காத்ரா ரயில் நிலையம் வரை வந்தே பாரத் புதிய ரயிலை உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரயில் டெல்லியிலிருந்து காஷ்மீரில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற வைஷ்ணவி கோயில் ஆலயம் வரை இயக்கப்படுகிறது. மணிக்கு அதிகபட்சம் 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலினால் பயண நேரம் 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாக குறைந்துள்ளது. அதாவது 4 மணி நேரத்திற்கு முன்னதாகவே காத்ரா சென்று விடலாம்.

ஒவ்வொரு பெட்டியிலும் கண்காணிப்பு காமிராக்கள், எல்.இ.டி திரைகள் மற்றும் அதிநவீன இருக்கைகள் மற்றும் தானியங்கி கதவுகள் இடம்பெற்றுள்ளன. கல்வீச்சினால் தேசமடையாத வகையில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் தண்டவாளத்தில் வரும் கால்நடைகளை தாக்காமல் அப்புறப்படுத்தும் வகையில் முகப்பு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் வகையின் முதல் ரயில் டெல்லிக்கும் வாராணசிக்கும் இடையே இயக்கப்படுகிறது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டிற்குள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்தார்.

Exit mobile version