கேதார்நாத் கோயில் பனியால் மூடப்பட்டதாக உத்தரகண்ட் அரசு தகவல் !

உத்தரகண்டில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு தீவிரமடைந்துள்ளது. இதனால், கேதார்நாத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன்கோயில் பனித் திட்டுகளால் முற்றிலுமாக சூழப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கோயில் பகுதியில் பனி 4 அடி உயரத்துக்கு உறைந்து காட்சி அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை என்றாலும் சில பக்தர்கள், ஊழியர்கள் கோவிலுக்கு வந்துகொண்டிருப்பதால் அவர்களை மாநில அரசு எச்சரித்துள்ளது. மற்றொரு புனிதத்தலமான பத்திரிநாத்திலும் பனிப்பொழிவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பனிக்காலம் முடிந்து ஏப்ரல் 27ஆம் தேதி பத்திரிநாத் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version