செங்கல் நாயகன் சென்ட்ரல் அரசிடம் சரண்டர் ஆயிட்டாரா?

2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பொதுத்தேர்தல் சமயத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது விடியா அரசின் தற்போதைய பட்டத்து இளவரசர் உதயநிதி அன்றைக்கு செங்கலைக் காட்டி பிரச்சாரம் செய்தார். அப்போது பிரதமர் மோடியை எதிர்த்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால் நேற்று பெட்டிப்பாம்பாக அடங்கிப்போய் டெல்லிக்கு சென்று பிரதமர் அவர்களை சந்தித்து உள்ளார். செய்தியாளருக்கு தகவல் தெரிவித்த பட்டத்து இளவரசர், பிரதமரிடம் அரசியல் எதுவும் பேசவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைப் பற்றி பேசவில்லை, வருங்கால கூட்டணிக் குறித்தும் பேசவில்லை என்றார். அப்படியென்றால் எதைத்தான் நீங்கள் பேசினீர்கள் என்று சமூக வலைதளங்களில் பட்டத்து இளவரசரை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகிறார்கள்.

நீட் விலக்குக் குறித்து பிரதமரிடம் கலந்தாலோசித்தேன் என்று சொல்லும் திமுக பட்டத்து இளவரசர், கொஞ்ச காலத்திற்கு முன்னால் நீட் விலக்குக் குறித்த ரகசியம் தனக்குத் தெரியும் என்று கூறியிருந்தார். ஒருவேளை அந்த ரகசியத்தைப் பிரதமரிடம் பேசியிருப்பாரோ என்று மக்களில் சிலர் கேள்வியெழுப்பி உள்ளனர். ஓட்டுக்காக சரமாரியாக பிரதமர் அவர்களைத் திட்டும் தோரணையில் பேசிய உதயநிதி இன்று பம்மிக்கொண்டு அவரை சந்தித்திருப்பது என்ன சமாச்சாரமாக இருக்கும் என்று அவரது கட்சிக்காரர்களே குழப்பத்தில் உள்ளார்களாம். இதில் belongs to the dravidian stoke என்று அவ்வப்பொழுது திமுகவினர் பதிவுகளை எழுதிவருகிறார்கள். ஆனால் இது திராவிட மாடல் இல்லை, திராவிட ஊழல் என்று யாராவது அவர்கள் காதருகே சென்று சொல்லுங்களேன் என்று நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.

அன்றைக்கு கருப்புச் சட்டை அணிந்து, Go back modi என்றவர்கள் இன்றைக்கு come on modi என்று காலில் விழாத குறையாக சென்று சந்தித்திருப்பதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று மக்களும் குழம்பியுள்ளனர். நான் முன்னாள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் இல்லத் திருமணவிழாவிற்கு தான் சென்றேன் என்று உதயநிதி சொல்லியிருக்கிறார். பாயாசம் சாப்பிட சென்ற இடத்தில் பிரதமருக்கு எதற்கய்யா சலாம் போடுகிறீர் என்று சொந்தக் கட்சியினரே கேலி பேசும் அளவிற்கு ஆளாகிவிட்டார் பட்டத்து இளவரசர். மேலும் பிரதமருக்கு திருவள்ளுவரின் சிறிய சிலை ஒன்றினைப் பரிசாக அளித்துள்ளார். ஏற்கனவே உங்கள் தாத்தாவிற்கு திருவள்ளுவரை விட ஒரு அடி உயரம் அதிகமாக இருக்கும்படி பேனா சிலை அமைக்க திட்டமிட்டிருக்கும் உங்களுக்கு திடீரென்று வள்ளுவர் மீது என்ன பாசம் என்றும் சிலர் கேள்வி கேட்டும் வருகிறார்கள்.

Exit mobile version