அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இன்று இந்தியா வருகிறார்.
சமீபகாலமாக அமெரிக்கா-இந்தியா இடையே பொருளாதார பிரச்சனைகள் நிலவி வருகின்றன. குறிப்பாக இந்தியாவுக்கான சிறப்பு இறக்குமதி அந்தஸ்தை கடந்த மாதம் அமெரிக்கா ரத்து செய்தது. இதனிடையே இந்தியாவுடன் நிலவும் பொருளாதார பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வுக்கான விரும்புவதாக அமெரிக்கா அறிவித்தது.
இந்தநிலையில், அமெரிக்க வெளியுறத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இன்று இந்தியா வருகிறார். டெல்லி வரும் அவர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச இருக்கிறார். மேலும் இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு துறை சார்ந்த முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் 28, 29 ஆம் தேதிகளில் ஜப்பானில் நடைபெறும் ஜி20 மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் சந்தித்து பேச இருக்கும் நிலையில், மைக் பாம்பியோவின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.