அமெரிக்க பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்ல வாய்ப்புள்ளதாக, அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா பொருளாதார சவால்களை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் பொருளாதார நிலை உள்ளிட்டவை தொடர்பாக அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அமெரிக்க பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்ல வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டிரம்ப், பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்லலாம் எனவும், பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தையில் மிகப்பெரிய தேவை உள்ளதாகவும் தெரிவித்தார். இவைகளுக்கு பிறகு, அமெரிக்க பொருளாதாரம் எழுச்சியடையும் என தெரிவித்தார்.