கேபிள் கட்டணத்தை மத்திய அரசு குறைக்க வலியுறுத்தல்

கேபிள் டிவிக்கான ஜி.எஸ்.டியை 5 சதவீதமாக குறைக்கவும், கட்டண உயர்வை ரத்து செய்யவும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மக்கள் தாங்கள் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து பார்க்கும் முறையினை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜனவரி முதல் அமலுக்கு வரும் இந்த திட்டத்தால் கேபிள் டிவி கட்டணம் பல மடங்கு உயரும் என்கின்றனர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள். எனவே இந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தியும், ஜி.எஸ்.டியை 5 சதவீதமாக குறைக்க கோரியும், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version