நீலகிரி மாவட்டத்திலுள்ள மேல்பவானி அணையின் நீர் மட்டம் முழுகொள்ளளவை எட்டியுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. இந்தநிலையில், மேல்பவானி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனையடுத்து முதற்கட்டமாக அணையிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பில்லூர், அத்திகடவு உள்ளிட்ட 15 கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார்.