அமேசானில் ஐபோன் ஆர்டர் செய்த உ.பி. வாலிபருக்கு நேர்ந்த கொடுமை

அமேசானில் ஆர்டர் செய்த Iphoneக்கு பதிலாக , பயன்படுத்தப்பட்ட Sony Experia செல்போனை கொடுத்து சென்றதால் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இணையத்தில் பிரபல ஆன்லைன் வர்த்தகமாக அமேசான் உள்ளது. டிவி, செல்போன், உடைகள் என பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், கடந்த 3-ந் தேதி அமேசான் வலைதளத்தில் தனது தந்தை பெயரில் ‘iPhone XR’ செல்போனை ரூபாய் 58,410 செலுத்தி ஆர்டர் செய்துள்ளார்.

மறுநாளே அமேசான் ஊழியர், ‘iPhone XR’ செல்போனை, வாடிக்கையாளரிடம் கொடுத்து சென்றார். இந்த நிலையில், பார்சல் கவரை பிரித்து பார்த்த போதுதான், வாலிபர் அதிர்ச்சி அடைந்தார். அதில். ‘iPhone XR’க்கு பதிலாக, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ‘Sony Experia’ செல்போன் இருந்தது.

இதையடுத்து, உடனடியாக அமேசான் புகார் பெட்டியில் நடந்த விவரத்தை வாலிபர் தெரியப்படுத்தினார். இதற்கு, அமேசான் நிறுவனம், 10-ந் தேதிக்குள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இருந்தனர். ஆனால், பல நாட்கள் சென்றதால், வாலிபர் போலீசார் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்தியாவுக்கான அமேசான் தலைமையகத்திற்கு தெரியப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக இந்தியாவின் அமேசான் செய்தியாளர், இனி எங்கள் வாடிக்கையாளருக்கு கொண்டு செல்லும் பொருட்கள் கவனமுடனும், பாதுகாப்பாகவும் எடுத்து செல்லப்படும் என்றும் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும் என்று உறுதி அளித்தார்.

Exit mobile version