திருப்பூரில் முன்னறிவிப்பின்றி நடந்த போர் பயிற்சி ஒத்திகையால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 10-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் முன்னறிவிப்பின்றி போர் பயிற்சி ஒத்திகை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உப்பாறு அணைப் பகுதியில் உள்ள, பனமரத்துப்பாளையத்தில், சூளூரில் இருந்து மூன்று விமானங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் போர் பயிற்சி மேற்கொன்டனர். இரண்டு விமானங்கள் வானில் வட்டமடித்தபடி பறக்க ஒரு விமானத்தில் இருந்த வீரர்கள் தரையிறங்கி தாக்குதல் நடத்துவது போல் ஒத்திகை பார்க்கப்பட்டது. எந்த முன்னறிவிப்பும் இன்றி இந்த போர் பயிற்சி நடத்தப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Exit mobile version