இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக, மத்திய சுற்றுலாத்துதுறை இணை அமைச்சர் அல்போன்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை துறைமுகத்தில் பயணியர் முனையம் தொடக்க விழாவில் அவர் கலந்து கொண்டார். விழாவில் உரையாற்றி அமைச்சர் அல்போன்ஸ், இதுவரை 34 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த ஆண்டு தமிழகத்திற்கு வந்துள்ளதாக கூறினார்.
சுற்றுலாத்துறை மூலம் இந்தியா 14 சதவீதம் வருவாயை ஈட்டி உள்ளதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் ரூ.140 கோடி செலவில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.