இரு நாடுகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமைதியை நோக்கி இருக்க வேண்டும்

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் நிலவும் அசாதாரண சூழலை கட்டுக்குள் வைக்க, இருநாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 14ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவப்படையினர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நேற்று அதிகாலை 3.30 மணிக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலகோட் ((Balakot)), முஷாஃபராபாத், சாக்கோதி பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்களை, 12 மிராஜ் 2 ஆயிரம் ரக போர் விமானங்களைக் கொண்டு, இந்தியா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில்  இந்தியா, பாகிஸ்தான் இடையில் நிலவிவரும் பதற்றமான சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஐநா சபை பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார். இரு நாடுகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமைதியை நோக்கி இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். பதற்றமான சூழலை மேலும் அதிகரிக்க வேண்டாம் என்றும், முடிந்தவரை நிலைமையை கட்டுக்குள் வைக்குமாறும் ஐநா பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version